சென்னை: குட்கா முறைகேடு வழக்கு 3 மாதங்களில் எப்படி விசாரித்து முடிக்க முடியும் என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஒன்றிய மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க அனுமதித்ததற்காக அப்போதைய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வியாஜபாஸ்கர், பிவி.ரமணா, டிஜிபி கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் துணை கமிஷனர் எஸ்பி. ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய மாநில அரசு உயர் அதிகாரிகள் என மொத்தம் 26 பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்து அந்த வழக்கினுடைய விசாரணை என்பது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்க கூடிய எம்பி, எம்.எல்ஏக்கள் மீதான விசாரணையை நடத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்ற பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது, இந்த வழக்கில் தான் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளிக்காத பலர், சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால், இவர்களை சிபிஐ சாட்சிகள் பட்டியலில் இருந்து நிக்க வேண்டும், அல்லது அனைத்து சாட்சிகளின் வாக்கு மூலங்களின், நகலாய்வு வழங்க உத்தரவிட வேண்டும் என குற்றம் சாட்டப்பட்ட சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையாளர் ஜார்ஜ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நிதிமன்றம் 12 வாரங்களுக்குள் விசாரணை முடிக்கவேண்டும், என எம்பி, எம்.எல்ஏகளின் மீதான விசாரணையை நடத்தும் சிறப்பு நீதிமன்றத்துக்கு கடந்த ஜூலை 4 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து முடிக்க 4 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று எம்பி, எம்.எல்ஏகளின் மீதான விசாரணையை நடத்தும் சிறப்பு நீதிமன்றதிற்கு உயர்நிதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பியது.
இது தொடர்பான வழக்கைதான் நீதிபதி லட்சுமிராயன் விசாரித்தார், அந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொது சிபிஐ தரப்பில் 205 சாட்சிகளுக்கு மேல் விசாரிக்க உள்ளதாகவும், 498 ஆவணங்கள் சமர்ப்பிக்க உள்ளதாகவும், வழக்கு குற்றச்சாட்டு பதிவிற்கு முந்தைய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஏராளமான சாட்சிகள் விசாரணையில் உள்ள போது எப்படி 3 மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க முடியும் என்று அறிக்கை தாக்கல் செய்யும் படி, சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவ.6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள்.


