Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஹீரோ சூப்பர் ஸ்பிளண்டர் எக்ஸ்டெக் 2.0

ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட ஹீரோ சூப்பர் ஸ்பிளண்டர் எக்ஸ்டெக் 2.0 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கில் 124.7 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 10.7 எச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்-ல் 10.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதிக எரிபொருள் திறன் ெகாண்ட இந்த பைக், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 72 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், இதிலுள்ள ஏபிஎப்ஐ மற்றும் ஐ3எஸ் தொழில்நுட்பம் எரிபொருள் சிக்கனத்துக்கு உதவுவதாகவும் நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு வசதி, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் உட்பட பல அம்சங்கள் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.86,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.