Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஹீரோ ஸ்பிளண்டர் பிளக்ஸ் பியூயல்

ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன் நிறுவனம், ஸ்பிளண்டர் பிளஸ் மற்றும் எச்எப் டீலக்ஸ் மோட்டார் சைக்கிள்களின் பிளக்ஸ் பியூயல் வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் 97.2 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது, 85 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கக்கூடியது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 8.6 எச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்-ல் 8.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம் பெற்றுள்ளது. ஷோரூம் விலையாக ஸ்பிளண்டர் பிளஸ் சுமார் ரூ.82,710 எனவும், எச்எப் டீலக்ஸ் சுமார் ரூ.72,792 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.