சென்னை: சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்றுப்பாதையில் இயக்க போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தொலைதூர பேருந்துகளை காட்டாற்று ஒர சாலைகளில் கவனமாக இயக்க வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கக்கூடாது. பேருந்துகளில் மழைநீர் ஒழுகுவது போன்ற குறைகள் இருந்தால் உடனடியாக மேலாளரிடம் தெரிவித்து சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement


