சென்னை: தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. பல இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. நாளை முதல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களின் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை படிப்படியாக அதிகரித்து 5ம் தேதியில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகள் என கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதனால் 5ம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

