தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் சித்தானூர் பகுதியில் இருந்து 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நேற்று வெயிலின் தாக்கம் அதிகமிருந்ததால், நிழலுக்காக தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ஓய்வு எடுத்தார். வெயில் காரணமாக களைப்பாக இருப்பதாக அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்தவர், திடீரென அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்த தேவகோட்டை தாலுகா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.