தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஹரியானாவில் வரலாறு படைத்த பாஜக.. அக்.12ம் தேதி அம்மாநில முதல்வராக பதவியேற்கிறார் நயாப் சிங் சைனி!!

Advertisement

ஹரியானா: ஹரியானா முதல்வராக வரும் 12ம் தேதி நயாப் சிங் சைனி பதவியேற்க உள்ளார். ஹரியானாவில் அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து, அக்டோபர் 8ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஹரியானாவில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி இறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 37 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வெளியான நிலையில் அவற்றை பொய்யாக்கி பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, ஹரியானா முதல்வர் நாயப் சிங் சைனி நேற்று இரவு தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்க பதிவில்; தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றேன். அவர் என்னை திலகமிட்டு வாழ்த்தினார். தாயின் அன்பு, ஆசிர்வாதம் தான் வாழ்க்கைக்கு அமுதம், என சைனி கூறியுள்ளார்.

ஹரியானாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பளித்தற்காக லாட்வா தொகுதி மக்களுக்கும், ஹரியானாவில் உள்ள மக்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் "அரசியல் என்பது எங்களுக்கு ஒரு சேவை ஊடகம் மட்டுமே. ஹரியானா மக்கள் அனைவருக்கும் நான் உறுதியளிக்கிறேன், எப்போதும் போல், மக்கள் சேவையில் மக்களின் சேவகனாக இருப்பேன். மக்களின் நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் இழக்க மாட்டோம். எங்கள் ஹரியானாவை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், வளர்ச்சியடையச் செய்ய எப்போதும் உறுதியோடு பாடுபடுவோம்” என்று அவர் கூறினார்.

இதையடுத்து, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஹரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெற்று 3வது முறையாக அரியணை ஏறுகிறது. கருத்துக்கணிப்புகளை புறம்தள்ளி பா.ஜ., அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தின் முதல்வராக நயாப் சிங் சைனி வரும் 12ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தெரிகிறது. மாநில தலைவர் மோகன்லால் படோலியுடன் டில்லி வந்துள்ள சைனி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அதன் பின்னர் வரும் 12ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்.

Advertisement

Related News