தாயன்பு காட்டி குழந்தைகள் கனவுகளுக்கு துணை நிற்கும் திராவிட மாடல் அரசின் சார்பில் குழந்தைகள் தின வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: குழந்தைகள் தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்; தமிழ்நாட்டில் குழந்தைகள் நலமாக பிறக்க அரசு மகப்பேறு நிதியுதவி வழங்குகிறது. குழந்தைகள் பிறந்ததும் வளமாக வளர ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம், வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலையிலும் சத்தான உணவை பெற காலை உணவுத் திட்டம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள் திட்டம், உயர்கல்விக்கு உதவ நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
ஒட்டுமொத்த நலனை உறுதிசெய்ய தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான 2021. தாயன்பு காட்டி குழந்தைகள் கனவுகளுக்கு துணை நிற்கும் திராவிட மாடல் அரசின் சார்பில் குழந்தைகள் தின வாழ்த்துகள். குழந்தைகளின் ஒவ்வொரு அடியிலும் அவர்களுடன் நிற்பேன், அவர்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன். குழந்தைகள் வெற்றியை கண்டு மகிழ்வேன், பரந்த பார்வயுைம் பகுத்தறிவும் கொண்ட குடிமக்களாய் அவர்களை வளர்த்தெடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.