Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

எச்-4 விசாதாரர்களின் வேலை உரிமை ரத்து?.. அமெரிக்கா அடுத்த அதிரடி

வாஷிங்டன்: அமெரிக்காவில் எச்-1பி விசாதாரர்களின் கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் எச்-4 விசாவில் பணிபுரிவதற்கான உரிமையை ரத்து செய்ய அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்துள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாதவர்கள் தங்கி பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்படுகிறது. எச்-1பி விசாதாரர்களை சார்ந்திருக்கும் அவர்களின் கணவன் அல்லது மனைவி மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட திருமணமாகாத குழந்தைகளுக்கு எச்-4 விசா வழங்கப்படும். 2014க்கு முன்பு வரையிலும் எச்-4 விசாதாரர்கள் அமெரிக்காவில் பணிபுரிய சட்ட உரிமை இல்லை.

இதில் திருத்தம் செய்து எச்-1பி விசா பெற்றவர்கள் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களின் துணைவர்கள் வேலை செய்வதற்கான அனுமதி விண்ணப்பித்து பெறலாம் என 2015ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த அனுமதியை 90 சதவீதத்திற்கும் மேல் இந்தியர்கள் பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக எச்-1பி விசாதாரர்களின் மனைவிகளே எச்-4 விசாவில் வேலை அனுமதி பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், எச்-4 விசாதாரர்களுக்கு வழங்கப்படும் சட்டப்பூர்வ வேலை அனுமதியை ரத்து செய்வதற்கான நடைமுறைகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக அதன் இணையதளத்தில் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் டிரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் கடந்த 2017ல் இதே போன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு, 2021ல் அது கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.