Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எச்-1பி விசாவை முற்றிலும் ரத்து செய்ய விரைவில் மசோதா தாக்கல்: அமெரிக்க பெண் எம்பி அறிவிப்பு

நியூயார்க்: திறமையான பணியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பணி வழங்க, அமெரிக்க நிறுவனங்கள் எச்-1பி விசாவை பயன்படுத்தி வருகின்றன. விசா உள்ளிட்ட குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், சமீபத்தில் எச்-1பி விசாவுக்கான கட்டணத்தை, 88 லட்சம் ரூபாயாக உயர்த்தினார்.

இந்த நிலையில்,அமெரிக்க தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் எச்-1பி விசாவை முற்றிலும் நீக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று குடியரசு கட்சி பெண் எம்பி அறிவித்துள்ளார். ஜார்ஜியாவை சேர்ந்த எம்பி மர்ஜோரி டெய்லர் கிரீன் கூறியதாவது:எச்-1பி விசா துஷ்பிரயோகம் செய்யப்பட்டு பல தசாப்தங்களாக அமெரிக்க தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் எச்-1பி விசா முறையை துஷ்பிரயோகம் செய்து அமெரிக்க மக்களை வெளியேற்றியுள்ளன. அமெரிக்கர்கள் உலகின் மிகவும் திறமையான மக்கள். எச்-1பி-ஐ முற்றிலும் நீக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும். எச்-1பி திட்டத்தை நீக்குவதன் மூலம் அமெரிக்க தொழிலாளர்களை பெருமளவில் இடம் மாற்றுவதை முடிவுக்குக் கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.