தமிழக வீரர் குகேஷின் வெற்றியால் இந்தியாவே பெருமை கொள்கிறது :பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!!
Advertisement
மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷ்-க்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "குகேஷின் சாதனை அவரின் அசாதாரண திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. குகேஷின் செயல்பாடு கோடிக்கணக்கானவர்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. குகேஷின் வெற்றியால் இந்தியாவே பெருமை கொள்கிறது,"இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Advertisement