அகமதாபாத்: அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடல் அடையாளம் காணப்பட்டது. டி.என்.ஏ. மாதிரி சோதனை மூலம் விஜய் ரூபானி உடல் அடையாளம் காணப்பட்டது. அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோரில் இதுவரை 32 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விமான விபத்தில் உயிரிழந்த 14 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது