புதுடெல்லி: குஜராத், ராஜஸ்தானில் சண்டிபுரா வைரஸ் நோய் பரவி வருகின்றது. இந்நிலையில் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்கு தேசிய கூட்டு நோய் பரவல் தடுப்பு மற்றும் மீட்புக் குழுவை அனுப்பி உள்ளது.
தேசிய நோய் கட்டுப்பாட்டு மையமானது மாநில கண்காணிப்பு பிரிவுகளுடன் இணைந்து வைரஸ் பரவும் விதம், நோயின் தன்மை, நோய்ப்பரவல் சூழல் மற்றும் சாத்தியமான சிகிச்சை முறைகள் குறித்த புரிதலை மேம்படுத்தும். மேலும் ஆதாரங்களின் அடிப்படையில் பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதலை வழங்குவதையும் இந்த குழு நோக்கமாக கொண்டுள்ளது.


