அகமதாபாத்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்ட ஆட்சியராக 2003ல் இருந்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சர்மா என்பவா் விவசாய நிலத்திற்கு விவசாயம் அல்லாத அந்தஸ்தை 40 நாட்களுக்குள் வழங்கியதன் மூலம் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சர்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அவரதுசொத்துக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது.
+
Advertisement


