புதுடெல்லி: 375 பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பண்டிகைகள் காரணமாக அக்டோபரில் ஜிஎஸ்டி வரி வசூலானது கடந்த ஆண்டைக்காட்டிலும் அதிகரித்துள்ளது. அக்டோபரில் மொத்த ஜிஎஸ்டி வசூலானது சுமார் ரூ.1.96லட்சம் கோடியாக உள்ளது. இது 2024ம் ஆண்டு அக்டோபரில் வசூலியான ரூ.1.87லட்சம் கோடியை காட்டிலும் 4.6 சதவீதம் அதிகமாகும்.
+
Advertisement
