புதுடெல்லி: நாட்டின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஆகஸ்ட் மாதத்தில் சுமார் ரூ.2 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாத வசூலைவிட 14.8 சதவீதம் அதிகமாகும். உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வருவாய் 9.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.37 லட்சம் கோடிக்கு மேல் இருந்தது. இறக்குமதி மீதான வருவாய் 29 சதவீதம் உயர்ந்து ரூ.62,604 கோடியாக இருந்தது.
ஆகஸ்டில் மத்திய ஜிஎஸ்டி வசூல் ரூ.38,413 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.46,316 கோடியாகவும் இருந்தது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.15 லட்சம் கோடியைத் தாண்டியது. வரி திருப்பித் தருதல் 68 சதவீதம் அதிகரித்து ரூ.31,795 கோடியாக இருந்தது. திருப்பித் தருதலைக் கழித்த நிகர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடி ஆகும்.



