அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இன்று காலை கல்லறைத் திருநாள் என்பதாலும் நாளை முகூர்த்த நாள் என்பதால் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வியாபாரமும் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று ஒரு கிலோ மல்லி 900 ரூபாயில் இருந்து 1,200க்கும் ஐஸ் மல்லி 600 ரூபாயில் இருந்து 800க்கும் ஜாதிமல்லி மற்றும் முல்லை 300ல் இருந்து 400க்கும் கனகாம்பரம் 300ல் இருந்து 2,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல், அரளி பூ 100 ரூபாயில் இருந்து 300க்கும் சாமந்தி 100ல் இருந்து 200க்கும் சம்பங்கி 80ல் இருந்து 200க்கும் பன்னீர் ரோஸ் 60ல் இருந்து 160 க்கும் சாக்லேட் ரோஸ் 80ல் இருந்து 200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’இன்று கல்லறை திருநாள் என்பதாலும் நாளை முகூர்த்த நாள் என்பதால் பூக்களை வாங்குவதற்கு பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் அனைத்து பூக்களின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெறுவதால் விவசாயிகள், வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றார்.
