Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பாலியல் பலாத்கார வழக்கில் பேரன் கைது; பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் பதவி விலக கோரிக்கை

லாகூர்: இரண்டு வெளிநாட்டு பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் துணை பிரதமரின் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே துணை பிரதமர் இஷாக் தார் ராஜினாமா செய்ய வேண்டும் என பாகிஸ்தான் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் கடந்த 29ம் தேதி 2 வெளிநாட்டு பெண்கள் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில், துணை பிரதமர், இஷாக் தாரின் பேரன் முகமது ரஸா தார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் பாலியல் பலாத்கார வழக்கில் பேரன் சம்மந்தப்பட்டுள்ளதால் இஷாக் தார் பதவி விலக வேண்டும் என்று பாகிஸ்தான் எம்பி பைஸல் வாவ்டா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் பதிவிடுகையில், சம்மந்தப்பட்ட வெளிநாட்டுத் தூதரகத்தின் தலையீட்டிற்குப் பிறகே முகமது ரஸா கைது செய்யப்பட்டார். இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும், இஷாக் தார் எப்படி துணைப் பிரதமராகவும் வெளியுறவு அமைச்சராகவும் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த முடியும்? பாகிஸ்தான் மீது அக்கறை இருந்தால், இஷாக் உடனடியாகப் பதவி விலக வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.