சென்னை-கரூர் அரசு பஸ்சுக்குள் மழை அமைச்சரிடம் பயணி புகார் அதிகாரி உடனடி சஸ்பெண்ட்
Advertisement
மழை நீர் ஒழுகியதால் பயணிகள் நின்றுகொண்டே பயணம் செய்துள்ளனர். இந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்த பயணி ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை டேக் செய்து பதிவிட்டார். அதில், ‘சென்னையில் இருந்து கரூருக்கு டிஎன்எஸ்இடிசி பஸ்சில் போகிறேன். பஸ் நல்ல நிலையில் இல்லை, மழைநீர் சீட்களில் ஒழுகுகிறது.
முறையாக பராமரிப்பு செய்யப்படவில்லை. போக்குவரத்து துறை அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த எஸ்இடிசி, சிரமத்துக்கு வருந்துகிறோம். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து அமைச்சர் உத்தரவின்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பஸ்சை முறையாக பராமரிக்காத கோவை கிளை உதவி பொறியாளர் விஜயன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement