மீனம்பாக்கம்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீரென டெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். அங்கிருந்து இன்றிரவு சென்னை திரும்புகிறார்.சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று காலை 8.05 மணியளவில் ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவசர ஒரு நாள் பயணமாக புதுடெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். அவருடன் செயலாளர், பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் ஆகியோரும் சென்றனர். புதுடெல்லியில் இருந்து ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக இன்றிரவு 9 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை திரும்புகிறார்.
கடந்த வாரம் புதுடெல்லிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றுவிட்டு, கடந்த ஞாயிறு இரவுதான் சென்னைக்குத் திரும்பினார். இந்நிலையில், இன்று மீண்டும் அவசர ஒரு நாள் பயணமாக புதுடெல்லி புறப்பட்டு சென்று, இன்றிரவே சென்னை திரும்புகிறார். தமிழ்நாடு ஆளுநரின் அவசர ஒரு நாள் டெல்லி பயணம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
