Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆட்சியில் இருந்த போது வாய் திறக்காமல் டாஸ்மாக் பணியாளருக்காக ஆதரவு பேரணி நடத்துவதா? எடப்பாடிக்கு வீரபாண்டியன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி), கடந்த 20 ஆண்டாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றன. இதில் 15 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிமுக இருந்த காலத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகள் குறித்து வாய்திறக்கவில்லை.

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, இன்று அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதிமுக டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகளுக்காக பேரணி நடத்துவதாக அறிவித்திருப்பது தேர்தல் ஆதாயம் தேடும் மலிவான செயலாகும். இதை பணியாளர்களும், மக்களும் நன்கறிவார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் தீர்ப்பு உணர்த்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.