Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

இந்திய அரசின் எப்சிஆர்ஏ திருத்தங்கள் இருதரப்பு உறவை பாதிக்கும்: அமெரிக்க எம்பிக்கள் கவலை

வாஷிங்டன்: வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் சமீபத்தில் ஒன்றிய அரசு புதிய விதிமுறைகளை முன்மொழிந்துள்ளது. இதன்படி ஒரு அமைப்பின் எப்சிஆர்ஏ பதிவு ரத்து செய்யப்பட்டாலோ, ஒப்படைக்கப்பட்டாலே அல்லது புதுப்பிக்கப்படாமல் காலாவதியானாலோ அந்த அமைப்பு பெற்ற வெளிநாட்டு பங்களிப்புகள் மற்றும் அவற்றை கொண்டு உருவாக்கப்பட்ட சொத்துக்களின் நிர்வாகத்தை ஏற்று்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட அதிகார அமைப்பை உருவாக்கும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்திய அரசு முன்மொழிந்துள்ள திருத்தங்கள் குறித்து அமெரிக்க எம்பி கவலை தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவை சேர்ந்த குடியரசு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரெய்லி மூர் தனது எக்ஸ் தள பதிவில்,”நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு பின் சில தசாப்தங்களிலேயே புனித தோமா அப்போஸ்தலர் மலபார் கடற்கரைக்கு வந்தததில் இருந்து இந்தியாவில் கிறிஸ்வர்கள் இருந்து வருகின்றனர்.

இவ்வளவு நீண்ட வரலாறு இருந்தபோதிலும் தேவாலயங்கள் மற்றும் மத அறக்கட்டளைகளை அரச தன்வசப்படுத்த அனுமதிக்கும் வகையில் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் விதிகளை திருத்துவது குறித்து இந்திய நாடாளுமன்றம் பரிசீலித்து வருகின்றது. இது கிறிஸ்தவர்களுக்கு எதிரான தெளிவான தாக்குதலாகும். இந்த மசோதா இதே பாதையில் சென்றால் அது இந்தியாவுடனான நமது இருதரப்பு உறவில் பெரும் கவலைக்குரிய விஷயமாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.