சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சிதிருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்ற நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வராததால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளை கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு, புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளை பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


