Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி சார்பில் அரசு உதவி வழக்கு நடத்துநர் (கிரேடு 2) பதவிக்கான முதல்நிலை தேர்வு வருகிற 15ம் தேதி முற்பகலில் நடக்கிறது. தேர்வுக்கூட ஹால் டிக்கெட் தேர்வாணைய இணையதளமான www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தங்களுடைய ஒருமுறை பதிவு தளத்தின் மூலமாக தேர்வர்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.