Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் ஜூன் 2ல் தொடக்கம்

*அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி : அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம், வரும் ஜூன் 2ம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் தினமும் டயாலிசிஸ் சிகிச்சை பெற நோயாளிகள் பலர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு புரத சிற்றுண்டிகள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினசரி 22 பேருக்கு 2 முட்டை, 100 மில்லி பால், 25 கிராம் கொண்டைக்கடலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரசு மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு புரத சிற்றுண்டி வழங்கி துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், ‘வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அன்று மாணவ- மாணவிகளுக்கு இலவச புத்தகம், சீருடைகள் வழங்கப்பட உள்ளது.

இதுபோல் இந்தாண்டு முதல் அங்கன்வாடி மையத்தில் புத்தகம் சீருடைகள் வழங்கப்பட உள்ளது. மாவட்டம் முழுவதும் 1.55 லட்சம் குழந்தைகளுக்கு சீருடைகள் தயார் நிலையில் உள்ளன.

தமிழ்நாட்டில் 54 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில் 6500 அங்கன்வாடி மையங்கள் கழிப்பறை வசதியுடன் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதில் குழந்தைகளுக்கு புரியும் வகையில் சித்திரங்கள் சுவர்களில் வரையப்பட்டு உள்ளன. பள்ளிகளில் மாணவ- மாணவிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் அரசு பள்ளிகளுக்கு வந்து சேருகின்றனர்.

முன்பு எல்லாம் ஆண்டுக்கு 3 தடவை குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் காலை உணவு திட்டத்தின் மூலம் பல சத்தான பொருட்கள் சாப்பிடுவதால் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

இதனால் பெற்றோர் நாங்கள் எங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு இப்போது மருத்துவமனைக்கே செல்வதில்லை என்று கூறி வருகின்றனர்.

இதனால் நடப்பாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம், வரும் ஜூன் 2ம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது’ என்றார். பேட்டியின் போது அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.