சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.450 உயர்ந்து ரூ.14,650க்கு விற்பனை. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 360க்கு விற்பனை செய்யப்படுகிறது
கடந்த 9ம் தேதி முதல் தங்கம் விலை தொடர் உயர்வை நோக்கி பயணித்தது. அதன்படி, இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை ஒரு பவுன் ரூ.1,07,600க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த நாள் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் பவுனுக்கு ரூ.3,600 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1,11,200க்கு விற்றது.
நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2800, பிற்பகலில் பவுனுக்கு ரூ.1320 என ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.4,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,15,320க்கு விற்பனையானது. இதன் மூலம் கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.9,080 அதிகரித்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கத்தை போலவே, வெள்ளி விலையும் உயர்ந்தது.
வெள்ளி விலை கிராம் ரூ.345க்கும், கிலோ ரூ.3.45 லட்சத்திற்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.215 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,200க்கும், பவுனுக்கு ரூ.1720 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,13,600க்கும் விற்றது. அதேபோல், வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.340க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.3.40 லட்சத்திற்கும் விற்பனையானது.
நேற்று சரிந்து இருந்த தங்கம் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து ஒருசவரன் ரூ.1,17,200க்கும் கிராமுக்கு ரூ.450 உயர்ந்து ரூ.14,650க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 360க்கும் கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.3.60 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.


