வார இறுதி நாளில் அதிரடி; தங்கம் பவுனுக்கு ரூ.2,360 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5ஆயிரம் சரிந்தது
சென்னை: தங்கம் விலை வாரத்தின் இறுதி நாளான நேற்று பவுனுக்கு ரூ.2,360 குறைந்தது. அதே போல வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் சரிந்தது.தங்கம் விலை கடந்த வாரத்தில் அதிரடியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி முதல் தங்கம் விலை குறைய ெதாடங்கியது. வாரத்தின் இறுதி நாளான நேற்று தங்கம் அதிரடியாக குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.295 குறைந்து ஒரு கிராம் ரூ.14,505க்கும், பவுனுக்கு ரூ.2,360 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 16,040க்கும் விற்றது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் நேற்று குறைந்தது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி 2.60 லட்சத்துக்கும் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.



