Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.352 குறைந்தது. தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜெட் வேகத்தில் அதிகரித்தது. கடந்த மாதம் 29ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.54,200க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது. 30ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.53,840 ஆக குறைந்தது. 31ம் தேதி தங்கம் விலையில் எந்தவித மாற்றம் இல்லாமல் சவரன் ரூ.53,840க்கு விற்பனையானது.

1ம் தேதி சவரன் ரூ.53,680க்கு விற்கப்பட்டது. 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒருநாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் நேற்று தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. அதாவது, நேற்று தங்கம் கிராமுக்44 குறைந்து ஒரு கிராம் ரூ.6,666க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.352 குறைந்து ஒரு சவரன் ரூ.53,328க்கு விற்பனையானது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.872 குறைந்துள்ளது. இந்த தொடர் விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.