Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது

சென்னை: தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 11ம் தேதி முதல் தங்கம் விலை உயர தொடங்கியது. 11ம் தேதி அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,160 ஆகவும், 12ம் தேதி பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,800 ஆகவும் விற்றது. 13ம் தேதி தங்கம் விலை ஜெட் வேகத்தில் பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,360க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வு தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற புதிய உச்சத்தை பதிவு ெசய்தது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஒரு பவுன் ரூ.74,320 அதிகபட்ச விலையாக இருந்ததை முறியடித்தது.

14ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,320க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது.

தொடர்ந்து 4 நாட்களில் பவுனுக்கு ரூ.3,000 வரை விலை அதிகரித்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. இதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை பெயரவுக்கு குறைந்திருந்தது. அதாவது கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.9,305க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.74,440க்கும் விற்றது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.