Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்தது. தங்கம் விலை கடந்த மாதம் அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 22ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 23ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்து ஒரு பவுன் ரூ.71,520க்கும் விற்பனையானது. 24ம் தேதி தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,920க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது.

அதாவது, தங்கம் விலை குறைந்திருந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.8,950க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.71,600க்கு விற்பனையானது. வார தொடக்க நாளில் தங்கம் விலை குறைந்தது நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கு விற்பனையானது. ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தொடர்ந்து 4 நாட்களாக அதாவது மே 23ம் தேதி முதல் நேற்று வரை வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111க்கு விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.