Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தங்கம் விலை காலையில் ரூ.640 உயர்ந்திருந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.640 உயர்ந்தது!... தங்கம் வாங்குவோர் கலக்கம்

சென்னை: தங்கம் விலை இன்று காலையில் ரூ.640 உயர்ந்திருந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.640 உயர்ந்ததால் தங்கம் வாங்குவோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தங்கம் விலை கடந்த 3 நாட்களாக கணிசமாக அதிகரித்தும் குறைந்தும் வருகிறது. கடந்த 23ம் தேதி ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 560-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 480-க்கும் விற்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.210-ம், பவுனுக்கு ரூ.1,680-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 350-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,680 குறைந்து ஒரு பவுன் ரூ.1,05,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.210 குறைந்து ரூ.13,140-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.230-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 1,05,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 13,220 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை காலையில் ரூ.640 உயர்ந்திருந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.640 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,06,400க்கும், தங்கம் விலை கிராமுக்கு ஒரே நாளில் ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,300க்கும், வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்திருந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000க்கு விற்பனையாகிறது. தொடர் விலையேற்றத்தினால் தங்கம் வாங்குவோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.