Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

மீண்டும் உயரும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.560 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்திலேயே ஆபரண தங்கத்தின் விலை லட்சம் ரூபாயை எட்டியது. கடந்த ஜன.29ம் தேதி ஒரு சவரன் விலை ரூ.1.34 லட்சத்தை எட்டியது. இந்தநிலையில், இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மார்ச் 1ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 600-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போல, வெள்ளி விலையும் நேற்று உயர்ந்து இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் அதிகரித்து. ஒரு கிராம் ரூ.260-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1.09,360-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,670-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.