Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஜெட் வேகத்தில் அதிகரித்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது

சென்னை: ஜெட் வேகத்தில் அதிகரித்த நிலையில் தங்கம் விலை நேற்று பெயரளவுக்கு சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.55,240க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை கடந்த 16ம் தேதி சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,640க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் ஆடி மாதத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,920க்கும், ஒரு சவரன் ரூ.55,360க்கும் விற்கப்பட்டது.

அதே நேரத்தில் வரலாற்றில் அதிப்பட்ச விலை என்ற புதிய உச்சத்தையும் தங்கம் விலை தொட்டது. இந்த ஜெட் வேக அதிகரிப்பு நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்தை தாண்டி விடுமோ என்ற வியப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று சற்று குறைந்து, அதாவது கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,905க்கும், ஒரு சவரன் ரூ.55,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.