Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தங்கம் விலை தொடர்ந்து ஜெட் வேகம் 4 நாளில் பவுனுக்கு ரூ.6,120 உயர்ந்தது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 4 நாளில் பவுனுக்கு ரூ.6,120 உயர்ந்துள்ளது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையில் தங்கம் விலை கடந்த 5ம் தேதி முதல் தொடர்ந்து உயர தொடங்கியுள்ளது. 5ம் தேதி அன்று தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,240 உயர்ந்தது.

தொடர்ந்து 6ம் தேதி பவுனுக்கு ரூ.2,160 அதிகரித்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,900க்கும், பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,200க்கும் விற்பனையானது. தொடர்ச்சியாக வார இறுதி நாளான நேற்றும் தங்கம் விலை உயர்வை தான் கண்டது. நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,965க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,720க்கும் விற்றது. இதன் மூலம் தங்கம் விலை தொடர்ச்சியாக 4 நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.6,120 உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை மீண்டும் கலக்கமடைய செய்துள்ளது. தங்கத்தை போல ஏற்றம் கண்டுவந்த வெள்ளி விலையில் நேற்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.