மெல்ல மெல்ல குறையும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 56,200க்கு விற்பனை.! இல்லத்தரசிகள் சற்று நிம்மதி
Advertisement
இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம். கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், இப்போது மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதனால், இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,025க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,240க்கும் விற்பனை அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,840 க்கும், கிராமுக்கு ரூ.7,480 ஆகவும் விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், கிராமுக்கு ரூ.100-க்கும், கிலோ வெள்ளி ரூ.100,000க்கும் விற்பனையாகிறது.
Advertisement