Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1120 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிவு

சென்னை: தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஒரே நாளில் இரு முறை விலை மாற்றம் என்பது காணப்பட்டது. இதற்கிடையில் கடந்த 3ம் தேதி அன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,700க்கும், பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 9,600க்கும் விற்கப்பட்டது. 4ம் தேதி அன்று தங்கம் விலை மாற்றம் இல்லாமல் ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 9,600க்கு விற்பனையானது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். இதனால், தங்கம், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. அதாவது, நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.13,560க்கும், பவுனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8,480க்கும் விற்பனையானது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனையானது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.