Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தங்கம் பவுனுக்கு ரூ.360 குறைந்தது

சென்னை: தங்கம் விலை கணிக்க முடியாத வகையில் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை இனிவரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதால் தங்கம் விலை பெரும்பாலும் ஏறவே வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக ஒன்றிய அரசு உயர்த்தியது. இதோடு கடந்த 1ம் தேதி அன்று ‘தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது. இந்நிலையில், சென்னையில் கடந்த சனிக்கிழமை அன்று பவுனுக்கு ரூ.120 உயர்ந்தது. இந்தச் சூழலில் சென்னையில் நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,125க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ஒரு பவுன் ரூ.1,13,000க்கும் விற்பனையானது.