Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தங்கம் விலையில் அதிரடி மாற்றம்; ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,040 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.3,040 குறைந்தது. அதே போல வெள்ளியும் கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிந்தது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் தங்கம் விலை இரண்டு மாற்றம் காணப்பட்டது. அதாவது நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,060க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12,480க்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் தங்கம் விலை குறைந்தது.

மாலையில் கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும், பவுனுக்கு ரூ.880 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,600க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது. அதன்படி நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.380 குறைந்து ஒரு கிராம் ரூ.13,570க்கும், பவுனுக்கு ரூ.3,040 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8,560க்கும் விற்பனையானது.

அதே நேரத்தில் தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.255க்கும், கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனையானது. தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.