சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. நேற்று காலை தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதாவது காலையில் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, கிராம் ரூ.14,385க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து, பவுன் ரூ.1,15,080க்கும் விற்றது. அதே போல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனையாது. நேற்று மாலையில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.
மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.14,175க்கும், பவுனுக்கு ரூ.1,680 குறைந்து ஒரு பவுன் ரூ.1,13,400க்கு விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் நேற்று மாலையில் மேலும் குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.250க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, பார் வெள்ளி 2.50 லட்சத்துக்கும் விற்பனையானது. இதன் மூலம் வெள்ளி விலை நேற்று காலை, மாலை என ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



