சென்னை: தங்கம் விலை கடந்த வாரத்தில் அதிரடியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் வார இறுதியில் இருந்து தங்கம் விலை குறைய தொடங்கியது. கடந்த 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை மேலும் குறைந்தது.
அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ஒரு கிராம் ரூ.14,370க்கும், பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ஒரு பவுன் ஒரு லட்சத்து 14960க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் நேற்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260க்கும், பார் வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கு விற்பனையானது.




