Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் 10 நாளில் பவுனுக்கு ரூ.8 ஆயிரம் சரிந்தது: இன்னும் விலை குறைய வாய்ப்பு

சென்னை: தங்கம் விலை 10 நாளில் பவுனுக்கு ரூ.8 ஆயிரம் சரிந்துள்ளது. தங்கம் விலை கடந்த 9ம் தேதி பவுனுக்கு ரூ.1,040 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13,600க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.400 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,800க்கும், பவுனுக்கு ரூ.3,200 சரிந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10,400க்கும் விற்பனையானது.

இதே போல வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,500க்கும், பவுனுக்கு ரூ.2,400 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8000க்கும் விற்பனையானது.

அதே நேரத்தில் தங்கம் விலை கடந்த 10 நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.8,000 குறைந்து நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்று மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260க்கும், பார் வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையானது. இந்த தொடர் விலை சரிவு திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்காக காத்திருப்பவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘மேற்காசிய போரின் எதிரொலியாக கச்சா எண்ணெய் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் காரணமாக டாலர் மற்றும் தங்கத்தின் மீதான முதலீடும் குறைந்துள்ளதால், டாலரின் மதிப்பும், தங்கத்தின் விலையும் சர்வதேச அளவில் தொடர்ந்து குறைந்து வருகிறது. வழக்கமாக தங்கத்தின் விலையும், டாலரின் மதிப்பும் ஒன்றுக்கொன்று எதிர்மறை தொடர்பில் இருக்கும்.

அதாவது, டாலரின் மதிப்பு குறைந்தால் தங்கத்தின் விலை உயரும். தங்கத்தின் விலை குறைந்தால் டாலரின் மதிப்பு உயரும். ஆனால், இரண்டின் மதிப்பும் ஒரே நேரத்தில் குறைந்து, கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்திருப்பது இதுவே முதல்முறை. அடுத்து ஒரு வார காலத்துக்கு இதுபோன்று தங்கம் விலை தொடர்ந்து குறைய வாய்ப்புள்ளது” என்றனர்.