தங்கம் விலையில் அடுத்தடுத்து மாற்றம் காலையில் ரூ.1440 குறைந்து மாலையில் ரூ.1280 உயர்ந்தது: வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 சரிந்தது
சென்னை: தங்கம் விலை விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,040க்கும், பவுனுக்கு ரூ.1,440 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12,320க்கும் விற்பனையானது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் நேற்று காலை குறைந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.255க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்த நிலையில், நேற்று மாலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,200க்கும், பவுனுக்கு ரூ.1280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13,600க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் மாலை நிலவரப்படி, வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையானது.




