Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

தங்கம் விலை காலையில் மாற்றமின்றி, மாலையில் அதிரடி பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் எகிறியது

சென்னை: தங்கம் விலை நேற்று காலையில் மாற்றமின்றி, மாலையில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்தது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் எகிறியது. நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,600க்கும் விற்பனையானது. தொடர்ந்து மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்தது. அதாவது தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,200க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து பார் வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்நிலையில் நேற்று காலையில் தங்கம், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால், நேற்று மாலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது நேற்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,100க்கும், பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12,800க்கும் விற்பனையானது. அதே போல நேற்று மாலையில் வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையானது. தங்கம், வெள்ளி விலை திடீரென அதிரடியாக உயர்ந்தது நகை வாங்குவோருக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.