சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,720-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை காலை, மதியம் என ஒரு நாளுக்கு இருமுறை மாறுதல் அடைந்து வருகிறது. ஜூலை மாத தொடக்கத்திலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை பிறகு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது.
இந்நிலையில் 4வது நாளாக தங்கம் விலை இன்றும் ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



