Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தங்கம் பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 13ம் தேதி அன்று பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13,760க்கு விற்பனையானது. 14ம் தேதி காலையில் தங்கம் விலை திடீரென பவுனுக்கு ரூ.1,440 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12,320க்கு விற்பனையானது. மாலையில் பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13,600க்கும் விற்பனையானது. 15ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,220க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13,760க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதாவது வாரத்தின் தொடக்க நாளிலும் தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,270க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14,160க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் நேற்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.255க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையானது.