Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வார இறுதி நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை கடந்த 13ம் தேதி ஒரு பவுன் ரூ.74,360 விற்பனையாகி புதிய உச்சத்தை பதிவு செய்தது. மறுநாள் இந்த புதிய உச்சம் முறியடிக்கப்பட்டது. அதாவது விலை மேலும் உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சம் கண்டது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. தொடர்ந்து, தங்கம் விலை கடந்த 18, 19ம் தேதி என 2 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.520 வரை உயர்ந்தது. அதன் பிறகு நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.9,210க்கும், பவுனுக்கு ரூ.440 ரூபாய் குறைந்து ஒரு பவுன் ரூ.73,680க்கும் விற்றது.

இந்நிலையில், வார இறுதி நாளான நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,235க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.73,880க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது.