Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சவரனுக்கு ரூ.840 அதிகரிப்பு; தங்கம் விலை மீண்டும் உயர்வு

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் 12ம் தேதி தங்கம் விலை இருமுறை குறைந்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2,360 குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில் நேற்று விலை மீண்டும் உயர்ந்தது.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் விலை ரூ.8765க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,120க்கும் விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் விலை ரூ.8855க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,840க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.109க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ,1,09,000க்கும் விற்பனையானது.