Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை இரண்டு முறை குறைந்துள்ளது: ஒரு சவரன் ரூ.1,17,800க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1720 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,800க்கு விற்பனை செய்யபடுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.215 குறைந்து ஒரு கிராம் ரூ.14,725 க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை காலையில் ரூ.560 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1720 குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

இதையடுத்து நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,20,080க்கும் ஒரு கிராம் ரூ.15,010க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,520க்கும் கிராமுக்கு ரூ.70 குறைந்தும் ஒரு கிராம் ரூ.14,940க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265க்கு விற்பனையாகிறது.

இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை இரண்டு முறை குறைந்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,720 குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.