சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 13ம் தேதி பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13,760க்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை திடீரென பவுனுக்கு ரூ.1,440 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12,320க்கு விற்பனையானது. மாலையில் பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13,600க்கும் விற்பனையானது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை மேலும் உயர்ந்தது. வாரம் இறுதி நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,220க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13,760க்கு விற்பனையானது.
வெள்ளி விலையில் நேற்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.



