Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்வு - சவரன் ரூ.1,08,800-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து உள்ளது. இதனையடுத்து 1 சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.1,08,800-ஆக உள்ளது. சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் தங்கம் விலை நிலையாக இல்லாமல் திடீரென ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 18) ஆபரண தங்கம் கிராம், 13,950 ரூபாய்க்கும், சவரன், 1,11,600 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஜூன் 19) ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, ரூ.380 குறைந்து, ரூ.13,570-க்கும், சவரன் ரூ.3,040 சரிந்து, 1,08,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் வார இறுதி நாளான இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து, ரூ.13,600-ஆக இருக்கிறது, ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ.240 அதிகரித்து ரூ.1,08,800-ஆக இருக்கிறது. அதே நேரம் வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.255-க்கும், 1 கிலோ ரூ.2.55 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை கணிசமாகக் குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் ஏறுமுகத்தைக் கண்டுள்ளது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கங்கள் காரணமாகவே உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை நிலையின்றி ஏறுவதும், இறங்குவதுமாக இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.